உள்ளடக்கத்துக்குச் செல்

எதிர் சூரியப் புள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வானவில்லில் எடுக்கப்பட்ட எதிர் சூரியப் புள்ளியின் புகைப்படம்
அடிவானத்தில் எடுக்கப்பட்ட எதிர் சூரியப் புள்ளி புகைப்படம்

எதிர் சூரியப் புள்ளி என்பது வான்வெளியை நோக்குபவரின் கண்ணோட்டத்தில் சூரியனுக்கு எதிர் திசையில் தோன்றும் ஒரு மறையக்கூடியப் புள்ளியாகும்.[1]

எதிர் சூரியப் புள்ளி (Antisolar point), சூரியன் அடிவானத்திற்கு கீழே இருக்கும் போது, மேலேயும், நிலை எதிர் மாறாக சூரியன் அடிவானத்திற்கு மேலே இருக்கும் போது, கீழேயும் இருக்கும். வெயில் அதிகமாக உள்ள போது எதிர் சூரியப் புள்ளியை எளிதில் காணலாம். நிற்பவரின் தலையின் நிழல் விழுமிடத்தில் அப்புள்ளியைக் காணலாம். வான் உச்சி (zenith) மற்றும் தாழ்புள்ளி (nadir) போல் முப்பரிமான வெளியில் எதிர் சூரியப் புள்ளியும் ஒரு நிலையான புள்ளியைப் பெற்றிருப்பதில்லை. நோக்குபவரின் கண்ணோட்டத்தைப் பொறுத்து எதிர் சூரியப் புள்ளியின் இடம் மாறுகிறது. நோக்குபவர் இடம் பெயரும் போது எதிர் சூரியப் புள்ளியின் இடமும் மாறுபடுகிறது.

வானவில், நிழலில் மங்கல் வெள்ளை ஒளிவளையம் (heiligenschein) மற்றும் ஒளிர்வுகள் (glory) [2] ஆகிய ஒளியியல் நிகழ்வுகளின் வடிவ மையப் புள்ளியில் (geometric center) எதிர் சூரியப் புள்ளி அமைகிறது.[3] சில நேரங்களில் சூரியன் உதிக்கும் போதோ அல்லது சூரியன் மறையும் போதோ எதிர் சூரியக் கதிர்கள் அடிவானத்திலுள்ள எதிர் சூரியப் புள்ளியில் குவிவது போல் காட்சியளிக்கும்.[4] இது ஒளியியற் கண்மாயமாக இருந்தாலும் மெய்யானக் காட்சி போல் இணைகற்றைகளாகப் பரவுகிறது.[5]

நகரத்தின் இரவு ஒளியற்ற அமாவாசை நாளில் எதிர்ஒளிர்வு (gegenschein) ஒரு எதிர் புள்ளியைச் சுற்றி உருவாகிறது. இவை கோள்களுக்கிடையே உள்ள தூசிகளில் (interplanetary dust) ஒளிப்பட்டு சிதறலடைவதால் உருவாகிறது. அமாவாசை இரவுகளில், நகர விளக்குகள் இல்லாத நாளில் எதிர்ஒளிர்வு (gegenschein) எதிர் புள்ளியை சுற்றி உருவாகிறது. இவை கோள்களுக்கிடையே உள்ள தூசிகளில் (interplanetary dust) ஒளிச் சிதறல் அடைவதால் உருவாகிறது. வானியலில் நிலவு மற்றும் கோள்கள் ஆகியவை சூரியனுக்கு எதிரே அமைந்துள்ள போது, எதிர் சூரியப் புள்ளியுடன் ஒரே தளத்தில் அமைந்திருக்கும். சந்திர கிரகணத்தின் போது முழுநிலவு பூமியின் கருநிழலுக்குள் (umbra) நுழையும் போது, எதிர் புள்ளியை நோக்கி பூமியானது பிம்பத்தை உருவாக்குகிறது.[1][6][7][8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Tim Herd. Angular Measurements in the sky பரணிடப்பட்டது 2014-09-07 at the வந்தவழி இயந்திரம், excerpt from Kaleidoscope Sky, page 27. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8109-9397-X, Abrams, 2007
  2. "The Glory". www.atoptics.co.uk.
  3. Les Cowley. Primary rainbows – Atmospheric Optics, accessed 13 September 2013.
  4. Les Cowley. Anticrepuscular rays, accessed 13 September 2013.
  5. "OPOD – Antisolar or anticrepuscular rays". www.atoptics.co.uk.
  6. Alexander Wünsche; Jim Foster, Anthelion and anthelic arcs, 2006
  7. Walter Tape, Atmospheric Halos, ISSN 0066-4634, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0875908349, American Geophysical Union, 1994, p. 27
  8. Les Cowley. South Pole Halos – Anthelic View – Atmospheric Optics, accessed 13 September 2013
"https://ta.wikipedia.org/w/index.php?title=எதிர்_சூரியப்_புள்ளி&oldid=3603242" இலிருந்து மீள்விக்கப்பட்டது